சமூக மாற்றத்திற்கான ஆசிரியர் களம்!
 

07-05-2016

 

இந்தி எதிர்ப்புப் போராட்டம் திராவிட இயக்கங்களுக்குப் பெரிய பாடமாக இருந்தது! ஆசிரியர்களும் அறிஞர்களும் பின் புலமாக இருந்து உருவாக்கியதே அப்போராட்டம்! அப்போராட்டத்திற்கும் திராவிடத்திற்கும் தொடர்பே கிடையாது. சொல்லப்போனால் பெரியார் போன்றவர்கள் இந்தியை வரவேற்றார்கள்! ஆனால் அந்த மாணவர் போராட்டத்தை முழுமையாக அறுவடை செய்தது திராவிட முன்னேற்றக் கழகமே! ஆசிரியர்கள் மீண்டும் ஒரு தமிழர் எழுச்சிக்கு வித்திட்டுவிடக்கூடாது என்பதில் தி.மு.க. பின்னர் கண்ணும் கருத்துமாக இருந்தது! பெரும்பாலான இடங்களில் தமிழரல்லாதவர்களையே தமிழாசிரியர்களாக நியமித்தது! தமிழ், இனம் குறித்து சிந்திக்க முடியாத அளவிற்கு ஆசிரியர்களை தி.மு.க. “கவனித்து”க் கொணடது!

 

 ஆசிரியப் பெருமக்களே, தமிழர்களத்தின் தமிழர் தேசிய கொள்கைகள் நோக்கித் திரும்புங்கள்! இழந்தது போதும்! இம் மாதம் 28ஆம் தேதி காரிக்கிழமை திருச்சியில் நடக்கும் நமது ஒன்றுகூடலுக்கு வாருங்கள்! ஆசிரியர் முயற்சியே நாட்டின் எழுச்சி!

தமிழ்த்திரு. அரிமாவளவன்

முத்துக்குமார் மரம் நடு இயக்கம்
 

06-05-2016

 

இம் மாதம் 2,3,4 ஆகிய மூன்று நாட்களிலும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 21 இளைஞர்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தினேன்! மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்றார்கள்! இவர்கள் இப்போது இந்த கோடைவிடுமுறை நாட்களில் சிற்றூர்களில் வாழும் மாணவர்களைப் பயிற்றுவிக்கச் சென்றிருக்கிறார்கள். பயிற்சியின் இறுதியில் அனைவரும் மரக்கன்றுகள் நட்டோம்! முத்துக்குமார் மரம் நடு இயக்கத்தில் அனைவரும் இணைந்தனர். செல்லும் இடமெல்லாம் மரங்களை நடுவோம் என்று உறுதியேற்றுச் சென்றனர்! சிற்றுளியால் கல்லும் தகரும்! தகர்ப்போம்!!!!!!

- தமிழ்த்திரு. அரிமாவளவன்

ஆசிரியர் அணி
 

05-05-2016

 

தமிழர் களத்திற்கான ஆசிரியர் அணி இன்று முறையாக தொடங்கப்பட்டது! திருச்சி குண்டூரில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பேராசிரியர் மணி, ஆசிரியர்கள் அருண்மொழி வேந்தன், மணி நாதன், முருகானந்தம், பழனிவேல், பேராசிரியர் மாணிக்கம் மற்றும் திருச்சி மாவட்டச் செயலாளர் திரு. பால் நிலவனும் நானும் கலந்து கொண்டோம்.


இம்மாதம் 28ஆம் நாள் (சனிக்கிழமை) காரிக் கிழமை மாலை நடைபெறும் முதல் ஒன்றுகூடல் திருச்சி நகரில் நடைபெறும். இன்றே இப்பொழுதே உங்கள் நாள்காட்டியில் குறித்துக் கொள்ளுங்கள்! தமிழர் தேசிய ஓர்மையுள்ள அனைத்து ஆசிரியர்களும் வருக!

- தமிழ்த்திரு. அரிமாவளவன்

நாளை நமதே! நாடும் நமதே!!
 

01-05-2016

 

விருதுநகர் மாவட்டம் சித்தப்பள்ளி ஊரில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று தமிழர்களத்தில் இணைந்தனர்! அவர்களோடு கலந்துரையாடினேன்! தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதித்தோம்! மாவட்டச் செயலாளர் தம்பி எழில் வேந்தன் உடனிருந்தார். ஆங்கிலேயனிடமிருந்து விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆன பின்னும் விலங்காண்டி நிலையில் எம் மக்களை வைத்திருக்கும் சூழ்ச்சி அரசியலை தவிடுபொடியாக்கித் தலைநிமிர்வோம்! நமக்குள் வகுத்த இலக்குகளை மாவட்டச் செயலாளர்களும் பிற பகுதிப் பொறுப்பாளர்களும் விரைந்து செயலாற்றிட கேட்டுக் கொள்கிறேன்! நாளை நமதே! நாடும் நமதே!!

- தமிழ்த்திரு. அரிமாவளவன்