வரலாறு

தாயகம் காக்கத் தமிழரே வருக!
தமிழர் களத்தில் இன்றே இணைக!

 

குருதியில் முளைத்த பயிர்!

 

1991 டிசம்பர் திங்களில் கர்நாடக மாநிலத்தில் பங்காரப்பா தலைமையிலான காங்கிரசு அரசும், பிற கர்நாடக அரசியல் கட்சிகளும், கன்னட வெறி அமைப்புகளும் தமிழர்களுக்கெதிரான ஒரு கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டன. அரசு அமைப்புகளின் துணையோடு நடத்தப்பட்ட அந்த திட்டமிட்ட வன்முறைக் களத்தில் தமிழர்களின் உயிர்களும் உடைமைகளும் சிந்திச் சீரழிந்தன. தமிழருக்கான ஒரு விடுதலைக் களம் தேவை என்பதை உலகிற்கு அறிவித்ததும், தமிழரை உலுப்பியதும் அந்த வன்முறை வெறியாட்ட நாட்களே. கர்நாடகத்தில் புரட்சி பேசியவர்களும், சாதிய அமைப்பினரும், பல்வேறு கட்சியினரும், ஊடகவியலாரும். கன்னடர் என்ற ஒரே பதாகையின் கீழ் நின்று தமிழருக்கெதிராக வன்முறை வெறியாட்டம் போட்டனர் அல்லது அவைகளை ஞாயப்படுத்தினர். தமிழர் களம் அந்த குருதிச் சிதறல்களின் நடுவில் தோன்றிய பேரு நெருப்பு என்றால் அது மிகையாகாது. 

 

தமிழ் நாடு திராவிட பலி மேடை!

 

கர்நாடகத்திலிருந்து, தாய்த் தமிழகத்தை நோக்கி தமிழர்கள் ஆறு லட்சம் பேர் ஏதிலிகளாக இடம் பெயர்ந்து வந்தனர். ஆனால், தமிழக அரசோ ஒப்புக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிர்த்தாக்குதல் செய்து சமனிலை கொணரவில்லை. அந்த இரண்டகம் இன்னும் நம் கண்களை திறந்தது. திராவிடம் என்ற பெயரில் தமிழகத்தை வழிவழியாக ஆண்டு கொண்டிருந்த அத்தனை பேரும் தமிழகத்தின் வளங்களையும் உரிமைகளையும் திராவிட பலி மேடையில் காவு கொடுக்கின்றனர் என்ற உண்மை உள்ளத்தை உலுக்கியது. எனவே, தமிழர் களதிர்க்கான தேவை இன்னும் வலுப்பட்டது. 

 

வெள்ளி முளைத்தது!

 

இந்தக் காலகட்டத்தில், "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்று அறிஞர் குண எழுதியது ஒரு குறு நூல் மட்டுமல்ல! அது நூலாய்ப் பிறந்துள்ள நெருப்பு விதைகள் என்பதை அறிந்து தமிழர் களம் அதை எடுத்துக் கொண்டு நாடெல்லாம் பரப்பியது. தமிழர் களம் மெய்யெனப் பட்டதை பட்டி தொட்டியெல்லாம் பரப்பியது. தயங்கித் தயங்கி, அஞ்சி அஞ்சி, அதன் விளைவால் தேங்கிக் கிடந்த தமிழ்த் தேசிய அரசியல், தமிழர் தேசிய அரசியலாக மாற்றம் பெற்று கரைபுரளத் தொடங்கியது.

இலக்கு

தூண்டில் புழுவாய் இலவசங்கள்!
மீன் போல் மாட்டும் தமிழர்கள்!

 

பொய்யால் போருக்கு போக முடியாது!

 

ஒரு ரூபாய்க்கு அரிசி, இலவசத் தொலைக்காட்சி, அரசே நடத்தும் சாராயக்கடை, இலவச வீடுகள் என்று தமிழர்களின் வாழ்வை தரங்கெட்டதாக்கி முடக்குகிறது அரசு. உழைப்பு உயர்வு என்கிற அடிப்படை இயல்புகளை அடியோடொழித்து தமிழர்களை கையேந்தும் ஒரு இனமாக மாற்றுவது இவர்களின் சூழ்ச்சியாக இருக்கிறது. தமிழரின் பண்பாடே தலைச் சிறந்த பண்பாடு என்று ஒரு புறம் நாம் நினைத்தால் அதை முற்றாக அழித்து ஓர் இழிநிலைக்கு கொண்டு செல்வதையே தமிழக அரசியலாளிகள் தம் குறிகோளாகக் கொண்டு செயல்ப்படுகிறார்கள்.

 

இலக்கு!

 

சலுகை அரசியல், இட ஒதுக்கீடு அரசியல் என்னும் கையேந்து நிலையை தமிழர்கள் மீது திணித்து வைத்துள்ளனர். அரசியல் ஆக்கிரமிப்பு செய்யும் திராவிட கட்சிகள் தமிழர்களை மட்டும் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்டு போராட வைக்கிறார்கள். மாற்றான் ஆட்சியில் இருக்க மண்ணின் மக்கள் திருவோடு ஏந்துவதா? எனவே ஆட்சியுரிமையே தமிழர் காலத்தின் இலக்கு. 

 

நாடும் மொழியும் நம் இரு கண்கள்!

 

"உலகின் முதன் மொழி தமிழே!" என்று நிறுவினார் மொழி ஞாயிறு தேவநேய பாவாணர்!. தொன்மையும் செழுமையும் மிகுந்த எம் தாய் மொழியை சிதைத்தவர் இந்திய, திராவிட ஆட்சியாளர்களே! தமிழக வழக்கு மன்றங்களில் தமிழ் இல்லை! கோயில்களில் சமற்கிருதமும், உருதும் பிற மொழிகளும் கோலோச்சுகின்றன! தமிழகப் பள்ளிகளை தமிழ் பயிற்று மொழியாக இல்லை! தமிழகத்தில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் இல்லை! ஆட்சி, அலுவல் மொழியாக ஆங்கிலம் தலை தூக்கி நிற்கிறது! இந்தி மொழியும், திராவிட மொழிகளும் திணிக்கப்படுகின்றன! இந்த அவல நிலைகளுக்கு சாவு மணி அடித்து தமிழைத் தமிழ் நாட்டின் ஆட்சி மொழியாக அனைத்து துறைகளிலும் நிறுவுவது தமிழர் காலத்தின் இலக்கு. பிற மொழிகளை கற்பதற்கும் அவைகளில் புலமை பல பெற்று உயர்வதற்கும் தமிழர் களம் எதிரி அல்ல என்பதையும் விளங்கபடுத்துவோம்.

 

அறிவாயுதம் மீட்டெடுப்போம்!

 

தமிழரின் அறிவும் ஆற்றலும் பன்முகப்பட்டதாய் இருந்தன. கலை, இலக்கியம், அறிவியல் என்று அவை விரிந்து பரந்தன . தமிழரின் அணுவியல், வானியல் போன்றவை உலகம் வியக்கும் அறிவாற்றலாகும். தமிழரின் இயல் இசை நாடக உருவாக்கங்கள் மிக உயர்வானவை! அனால், போர் மரபை இழந்த தமிழர்கள் தற்காப்பை இழந்து இவை அனைத்தையுமே கோட்டை விட்டார்கள். இழந்த இக்கலைகளையும் பண்பாட்டு மரபுகளையும் மீட்டெடுத்து மறுஉருவாக்கம் செய்வதும் தமிழர் களத்தின் இலக்கு!

 

வளம் தரும் தமிழ் வணிகம்!

 

வணிகமயமாகிப்போன இப் புத்துலகில் தமிழரின் வளங்கள் களவாடப் படுகின்றனவேயோழிய தமிழர்களின் வாழ்வு ஏற்றம் பெறவில்லை! எனவே, தமிழக வணிக நலன்கள் தமிழரின் வாழ்வு ஏற்றம் பெரும் வகையில் தமிழரின் கைகளுக்கு மாற்ற தமிழர் களம் தொடர்ந்து பாடுபடும்.