சேவைகள்

சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு

தமிழகத்தின் நீர் வளத்தைச் சூறையாடும் ஒரு மரம் சீமைக் கருவேல மரம்!  எங்கெங்கு நோக்கினும் இம் மரமே!  நிலத்தடி நீரையும், வானிலுள்ள நீரையும் உறிஞ்சி எடுத்து வறட்சியை உருவாக்குகிறது!  ஆற்றங்கரைகளிலும் குளங்களிலும் இன்று இம் மரமே அடந்து வளர்ந்து காடாகிக் கிடக்கிறது!

 

தமிழர்களம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் நடுவில் இது தொடர்பான விழிப்பை ஏற்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், மாணவர்களை ஒருங்கிணைத்து இதுவரை இரண்டரை லட்சம் சீமைக் கருவேலங்கன்றுகளைப் பிடுங்கியெடுத்து அழித்திருக்கிறது!  இப் பணி தொடரும்.  மண்ணை மழை நனைக்கும் போதெல்லாம் இக் கன்றை பிடுங்கி எடுக்கும் ஆர்வம் துளிர்க்க வேண்டும்!  இணைக இன்றே சீமைக் கருவேல மர ஒழிப்பு இயக்கத்தில்!

முத்துக் குமார் மரம் நடு இயக்கம்!

முத்துக்குமார் எரிக்கப்படவில்லை நம்மில் விதைக்கப்பட்டார்!  2016ஆம் ஆண்டு அவர் வித்தான சனவரி 29 அன்று அவர் பெயரில் முத்துக்குமார் மரம் நடு இயக்கம் தொடங்கினோம்! அன்று காலை சென்னையில முத்துக்குமார் தந்தையாரிடமிருந்து பெற்ற ஒரு பூவரசு மரக்கன்றை திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டத்திலுள்ள வெள்ளக்குளத்தில் மாணவர்களும் ஆர்வலர்களும் புடை சூள பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன் அவர்கள் தலைமையில் நட்டுவித்தோம்!  2017 ஆம் ஆண்டு நினைவுநாளுக்குள் ஒரு லட்சம் கன்றுகளையாவது நட்டு வளர்ப்போம் என்று சூளுரைத்தோம்!  கன்றுகள் அணியமாகின்றன!  களமும் காத்திருக்கிறது!  இதற்கிடையில் ஐயா திரு. சகாயம் உள்ளிட்டோர் இவ் வியக்கத்தில் இணைந்து வாழ்த்தினர்!  திருமணங்களிலும் பிற நிகழ்வுகளிலும் மரக்கன்றுகளைப் பரிசாக அளிக்க அழைக்கிறோம்!

ஊழல் ஒழிப்பு இயக்கம்!

ஊழலும் கையூட்டும், லஞ்சமும் இந்த நாட்டை அரித்துத் தின்று கொண்டிருக்கிறது!  ஊழலற்ற ஒரு சமூகத்தைக் கட்டமைப்பதே தமிழர்களத்தின் நோக்கமாகும்!  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்தையும் இளையோர் இயக்கத்தையும் உருவாக்கி வருகிறோம்.  குறிப்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை ஊழலுக்கு எதிராக பயன்படுத்தும் உத்திகளை அவர்களுக்குப் பயிற்றுவிக்கிறோம்.  ஊழலற்ற ஓர் உயர்ந்த சமூகத்தை உருவாக்கும் தமிழர்களத்தின் அறப்போரில் இன்றே இணையுங்கள்!