ஆசிரியர் - குணா மண்ணையும் கொடியையும் கொற்றத்தையும் இழந்த தமிழ்ப் பேரினம், திராவிட இனம் எனும் பொய்ப்பெயரில் புதைக்கப்பட்டுக் கிடக்கிறது. அது தன் தலையறுத்து தன் அடையாளத்தையும் இறைமையையும் மீட்டெடுக்க உதவும் ஆற்றல், வரலாறு எனும் அடிப்படை அறிவியலுக்கு உண்டு. மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் திருடப்பட்டும் சிறுமைபடுத்தப்பட்டும் கிடக்கும் தமிழரினத்தின் வரலாற்றை மீட்டெடுக்கும் திருப்பணி ஆங்காங்கே தொடங்கியுள்ளதைக் காணக் கண்கள் பூரிக்கின்றன. இஃது ஒரு தொடக்கமேயாகும். செய்ய வேண்டியன உலகளவு. பகை முடிக்கத் தமிழரினம் விரைவில் துயிலெழும் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன. அதனால் தொய்வின்றி இன மீட்புக்கடனை ஆற்ற வேண்டியது காலத்தின் அறைகூவல்.
top of page